வீட்டிலிருந்து இனி ஒருவருக்கு மாத்திரமே வெளியில் செல்ல முடியும் − புதிய சுகாதார வழிகாட்டி வெளியானதுசுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால், புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சுகாதார வழிகாட்டி, எதிர்வரும் 31ம் திகதி வரை அமுலில் இருக்கும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, வீட்டிலிருந்து ஒரு நபருக்கு மாத்திரமே வெளியில் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வேலைக்கு செல்வோர் மற்றும் வைத்திய சிகிச்சைகளுக்காக செல்வோருக்கு இந்த நடைமுறை பொருந்தாது என சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக கடைத் தொகுதி இன்று (18) முதல் மூடப்பட்டுள்ளது.பல்பொருள் அங்காடிக்குள் (சுபபர் மார்க்கெட்) 25 வீதமானோரே இருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளை பராமரிக்கும் நிலையங்களை இரு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.உள்ளக விளையாட்டரங்குகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.

சிறுவர் பூங்கா, களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், கடலோர விருந்து நிகழ்வுகள், கரையொரங்களில் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நீச்சல் தடாகம் மற்றும் ஸ்பாக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

hey