வீதியில் வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது வீதியில் உதவி கேட்பவர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு

யாழில் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இன்றிரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் சிவலிங்கப்புலியடியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் சிவலிங்கப்புலியடி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்த ஒருவர் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கேட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் விசாரித்துகிகொண்டிருக்கும் போது அவர் அணிந்த 6 தங்கப்பவுன் சங்கிலியை அறுத்து தப்பி ஓடியுள்ளார்.மேலும் இச் சம்பவத்தையடுத்து சங்கிலியை அபகரித்துச் சென்றவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கியதை அடுத்து சந்தேக நபரிடம் இருந்து சங்கிலியும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

hey