“தன் வாழ்க்கை இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்கிறேன் என்றும் தன்னால் இனி மூச்சு விட முடியாது” பெண் ஒருவரின் உருக்கமான கருத்துகோவிட் நோய்த்தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு பெண் கூறிய உணர்வுப்பூர்வமான கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.அதில் “தன் வாழ்க்கை இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்கிறேன் என்றும் தன்னால் இனி மூச்சு விட முடியாது” என்றும் உருக்கமாக கூறியுள்ளார். அதில் அவர் தொடர்ந்தும் கூறியுள்ளதாவது,

“நான் கோவிட் தொற்றின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன். என் உடலில் ஒக்ஸிஜன் குறைந்துவிட்டது. நான் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறேன்.

வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. நான் இன்னும் கஷ்டப்படுகிறேன். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. நான் மூச்சுத் திணறி ஜன்னல் வழியாக வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கிறேன்.

என்னால் இனி வீட்டுக்கு போக முடியாது. எனினும், நான் இப்போது போக வேண்டும் என நினைக்கிறேன். நான் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.” என அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

hey