18-30 வயதினர்களுக்கு கொரோனா தடுப்பூசி பெறுவது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்புஒக்டோபர் மாதம் முதல் 18 – 30 வயது வரை

ஒக்டோபர் மாதம் முதல் 18 – 30 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போது, ​​30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.செப்டம்பர் இறுதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு டோஸூம் போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும், கட்டம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey