இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை : கொழும்பிற்கு யாரும் வர வேண்டாம்கொழும்பில் கொரோனா தொற்று மிகவேகமாக பரவிவருவதால்

கொழும்பில் கொரோனா தொற்று மிகவேகமாக பரவிவருவதால் அத்தியாவசிய காரணத்திற்காக இன்றி கொழும்பு நகருக்கு வெளிமாவட்ட மக்கள் வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு நகருக்கு வருவது பற்றி ஒருமுறையல்ல, மூன்று முறை சிந்திக்கும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளும்படி மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

hey