நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள் : இரத்த தானம் செய்ய முன்வாருங்கள் : அதிகம் பகிர்ந்து உதவுங்கள்கோவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு இரத்தம் வழங்குவதில்

கோவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு இரத்தம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப இரத்த தானம் செய்ய முன்வருமாறு தேசிய இரத்த மாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவிட் தொற்று நெருக்கடி காரணமாக இரத்த தானம் வழங்கும் திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக நாட்டில் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என இரத்த மாற்று சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள், தலசீமியா நோயாளிகள், புற்று நோயாளிகள், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை ஆகியவற்றுக்குத் தினமும் இரத்தம் தேவைப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய வைத்தியசாலைகள் மற்றும் இரத்ததான நிலையங்களுக்குச் சென்று இரத்த தானம் வழங்க முடியும் எனவும் தேசிய இரத்த மாற்று சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய இரத்த தானம் செய்பவர்களுக்கு நாரஹேன்பிட்டி இரத்த நிலையம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும், ராகம, மஹரகம, குருநாகல் மற்றும் அநுராதபுர வைத்தியசாலைகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது www.nbts.health என்ற இணையத்தளத்துக்குப் பிரவேசித்து இரத்த தானம் செய்வதற்கு எளிதான நேரத்தைப் பதிவு செய்து கொள்ளுமாறும் தேசிய இரத்த மாற்று சேவை நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

hey