இலங்கையின் அனைத்து மாகாண எல்லைகளிலும் இராணுவம் – எல்லை தாண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைஇலங்கையின் அனைத்து மாகாண எல்லைகளையும்

இலங்கையின் அனைத்து மாகாண எல்லைகளையும் உள்ளடக்கிய வகையில் பொலிஸ் வீதித்தடைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண பயண கட்டுப்பாட்டை மீறும் நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முப்படையினரின் ஆதரவும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.அத்தியாவசிய காரணங்களின்றி மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்கு கடுமையான நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக மேல் மாகாணத்திற்கு நுழைபவர்களை தடுப்பதற்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் முகக் கவச சட்டத்தை மிகவும் கடுமையாக செயற்படுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகக் கவசம் அணியாத ஒருவர் பொது இடத்திற்கு சென்றால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

முகக் கவசம் அணிந்த போதிலும் உரிய முறையில் அணிந்திருக்கவில்லை என்றாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey