சினோபார்ம் தடுப்பூசி 2000 ரூபாவிற்கு விற்பனையா..? சிக்கிய ஊழியர்தலா 2000 ரூபாவிற்கு சினோபார்ம் தடுப்பூசியை

தலா 2000 ரூபாவிற்கு சினோபார்ம் தடுப்பூசியை விற்பனை செய்த வைத்தியசாலை சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ லுனாவ வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிற்றூழியர் ஒருவரே இவ்வாறு தடுப்பூசி விற்பனை செய்துள்ளார்.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை சட்டவிரோதமான முறையில் குறித்த சிற்றூழியர் விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் கணக்காய்வு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தரவுகளுக்கு அமைய குறித்த சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் சில காலங்களாகவே இவ்வாறு தடுப்பூசிகளை பணத்திற்கு விற்பனை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மொரட்டுவ கொரல்லவல பகுதியைச் சேர்ந்த குறித்த சிற்றூழியர் மொரட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர் மொரட்டுவ நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

hey