இலங்கையில் பயணக்கட்டுப்பாடு அல்லது பொது முடக்கம்! சில மணி நேரங்களில் இறுதி தீர்மானத்திற்கு சாத்தியம்நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள்

நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து இன்றைய தினத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பயணக்கட்டுப்பாடு அல்லது பொது முடக்கம் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் செயலணியில் இது குறித்து நேற்று மாலை வரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டிக்கவில்லை என்ற பேதும் நேற்றைய தினத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டு இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நேற்றைய தினம் 150இற்கும் அதிகமான கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் சுகாதார தரப்பினை சேர்ந்தவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைய இன்று இன்னும் சில மணி நேரங்களில் நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey