5 வினாடிகள் முகக்கவசமின்றி இருப்பது கூட ஆபத்து : வெளியாகிய அதிர்ச்சி தகவல்5 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால்

5 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட கோவிட் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.குறிப்பாக அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை.

5 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இது பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

hey