நாட்டில் முக்கிய அத்தியாவசிய பொருள்களின் விலையில் திடீர் மாற்றம் : வெளியாகிய தற்போதைய விலைகளின் நிலவரம்லாப் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி அளித்துள்ளது.இதற்கமைய 12 தசம் 5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயுவின் விலை 363 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் 12 தசம் 5 கிலோகிராம் புதிய சிலிண்டரின் விலை 1 ஆயிரத்து 856 ரூபாவாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய லாப் சமையல் எரிவாயுவின் 5 கிலோ சிலிண்டரின் புதிய விலை 743 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், லிட்ரோ எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாதென இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது விற்பனை செய்யப்படும் விலைகளிலேயே லிட்ரோ சமையல் எரிவாயுவை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராத திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சட்டமூலம் சட்டமா அதிபரின் கண்காணிப்புக்கமைய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இதன்படி, நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையினை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அபராதத் தொகை முன்னதாக 25 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட நிலையிலேயே, அதனை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிர்ணய விலையை மீறி பல்வேறு நபர்கள் தொடர்ந்தும் பொருட்களை விற்பனை செய்துவந்த நிலையிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள மொத்த விற்பனை நிலையத்தின் வியாபாரிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.இதன்படி, பருப்பு, சீனி, உருளை கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பருப்பு, தற்போது 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்க்பட்டுள்ளது.அதேபோன்று, 125 ரூபாவாக இருந்த ஒருகிலோகிராம் சீனி 158 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 265 ரூபாவாக இருந்த வெள்ளை வெங்காயம் 334 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 120 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 140 ரூபாவுக்கும், 80 ரூபாவாக இருந்த ஒருகிலோகிராம் பெரிய வெங்காயம் 95 முதல் 100 ரூபாய் வரையிலும் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, பல்வேறு பொருற்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தள்ளனர்.

hey