தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையங்களில் PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலை அறிவிப்புதனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையங்களில்

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையங்களில் PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (12) வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி, தனியார் துறையினரிடம் நடத்தப்படும் PCR பரிசோதனைகளுக்காக 6,500 ரூபாவும், அன்டிஜன் பரிசோதனைக்காக 2000 ரூபாவும் ஆகக்கூடிய கட்டணமாக அறவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

hey