இலங்கை முழுவதும் 1000 பாலங்கள் நிர்மாணிக்கும் திட்டம் விரைவில்இலங்கை முழுவதும் ஆயிரம் பாலங்களை நிர்மாணிக்கும் திட்டம்

இலங்கை முழுவதும் ஆயிரம் பாலங்களை நிர்மாணிக்கும் திட்டத்தை தடையின்றி அமுல்படுத்துமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

‘கிராமங்களை இணைக்கும் இதயத்தின் பாலம்’ என்ற கருப்பொருளுடன் ஆயிரம் பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ், கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது திட்டத்தின் நோக்கமாகும்.

இத் திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோதலைமையில் சமீபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக பால நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஊழியர்களை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய வேலைக்கு அழைத்து வந்து, பாதுகாப்பான முறையில் வேலையைத் தொடர வைக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

hey