தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்புதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க COVID-19 தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தடுப்பூசிகளை பெறலாம்.தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் உயிருள்ள வைரஸ்கள் இல்லை. இதனால் எந்த ஆபத்தும் இல்லை.

தடுப்பூசிகள் மூலம் எந்த ஆபத்தும் இல்லை. உண்மையில், தாய்மார்களின் ஆன்டிபாடிகள் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.

hey