வவுனியாவில் விசேட சுற்றிவளைப்பின் போது நபரொருவர் கைதுவவுனியா மாவட்டம், புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயினாமடு பிரதேசத்தில் சந்தேகநபரொரவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்றைய தினம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

hey