வவுனியாவில் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்வவுனியாவில் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

வவுனியாவில் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு நடவடிக்கை நான்கு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நெல்லினை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்து அரிசியை கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நெல் கட்டுபாட்டு சபையால் சிறுபோக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் பூங்கா வீதி, மாமடு, நெடுங்கேணி, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நெல் களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ நாடு 50 ரூபாய்க்கும், சம்பா 52 ரூபாய்க்கும், கீரி சம்பா 55 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுவதுடன் போக்குவரத்து கூலியாக கிலோ ஒன்றுக்கு 1.50 சதம் வழங்கப்படுகின்றது.

எனவே, விவசாயிகள் உலர்ந்த நெல்லை அரசாங்கத்தின் உத்ததரவாத விலையில் நெல் களஞ்சியசாலைகளில் விற்பனை செய்ய முடியும் என நெல் கட்டுப்பாட்டு சபையினர் தெரிவித்துள்ளனர்.

hey