வவுனியாவில் வெள்ளை வானில் பெண்ணை கடத்தி நகை பறிக்க முற்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைதுவவுனியாவில் ஆலயத்திற்கு

வவுனியாவில் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீடு நோக்கி நடந்து சென்ற பெண்மணி ஒருவரை கடந்த 19.07.2021 அன்று வெள்ளைவானில் கடத்திச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைத்திருடிவிட்டு பெண்மணியை இறக்கிவிட்டு தப்பிச் சென்றமை குறித்து பொலிஸ் நியைத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது .

இந்நிலையில் (29.07.2021) குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அண்மையில் வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஆலயத்திலிருந்து நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்மணி ஒருவரை வெள்ளைவானில் வந்த இனந்தெரியதாவர்கள் கடத்திச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையை திருடிவிட்டு அப்பெண்மணியை வானிலிருந்து இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருந்தார்கள்.

இச்சம்பவம் குறித்து பெண்மணியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின்போது குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட 28 வயதுடைய,

பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பிற்பகல் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய வெள்ளை நிற டொல்பின் ரக வான் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த சந்தேக நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெவித்துள்ளனர்.

hey