வவுனியா கிராம அலுவலகர் பிரிவு மக்களுக்கு சுகாதார பிரிவினர் விடுக்கும் அவசர கோரிக்கைவவுனியா – பண்டாரிக்குளம் மற்றும் கூமாங்குளம் கிராம அலுவலர்

வவுனியா – பண்டாரிக்குளம் மற்றும் கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு சுகாதார பிரிவினர் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் மற்றும் கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களை நாளைய தினம் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

நாடு பூராகவும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

அதற்கமைவாக வவுனியா மாவட்டத்திலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவின் சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு விபுலானந்தா கல்லூரியில் காலை 8 மணி தொடக்கம் 10 வரை 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

அத்துடன், கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் காலை 8 மணி முதல் மாலை வரை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் காலை முதல் மாலை வரையும், ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையிலும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

எனவே, 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

hey