வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார நிலைய ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில்

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார நிலைய ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று (26.07.2021)கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் அங்கு பணியாற்றும் 25 ஊழியர்களிற்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்றையதினம் சென்ற சுகாதாரப் பிரிவினர் ஐந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களை தனிமைப்படுத்தியுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை இனம்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

hey