வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய மாணவர்களினால் இரண்டு திறன் வகுப்பறைகள் நிர்மாணிப்புவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய மாணவர்களினால்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய மாணவர்களினால் (Vtamm Bulls) இரண்டு வகுப்பறைகள் திருத்தம் மேற்கொண்டதுடன் அதனை புதுப்பித்து திறன் வகுப்பறைகளாக மாற்றியுள்ளனர்.

பாடசாலையில் கற்றலை முடித்து சில வருடங்களின் அவர்களின் வாழ்க்கை வியாபாரம் என செல்கின்ற இந்த சமூகத்திற்கு முன்மாதிரியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய மாணவர்கள் (Vtamm Bulls) ஒன்றினைந்து 1.55 மில்லியன் ரூபாய் நிதியில்

75 அகலம் உடைய இரு ஸ்மாட் திரை கொள்வனவு செய்ததுடன் பராமரிப்பு அற்ற நிலையில் காணப்பட்ட இரண்டு வகுப்பறைகளை திருத்தம் மேற்கொண்டு அதனை திறன் வகுப்பறைகளாக மாற்றியுள்ளனர்.

Vtamm Bulls என்ற நாமத்தில் செயற்படும் 1998 ஆம் வருட பழைய மாணவர்கள் கொரோனா பயணத்தடை காலத்திலும் பல மக்களுக்கு நிவாரணப்பொருட்களையும் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey