வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு சுத்திகரிப்பு குடிநீர் தொகுதிவவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில்

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்திற்கு லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி கையளிக்கப்பட்டது.

வவுனியா கோவிற்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையில் அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பன இயங்கி வருகின்றன.

சிவன் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

இந்நிகழ்வில் சட்டத்தரணி , பொறியியலாளர் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , வர்த்தகசங்கத்தின் பிரதிநிதி என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey