வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்திற்கு சென்றோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்



வவுனியாவில் சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தில்

வவுனியாவில் சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தில் பணியாற்றும் மூன்று பேருக்கு கொவிட்19 தொற்று உறுதியானது.

இதையடுத்து குறித்த நிலையத்திற்கு சென்றவர்கள் உடனடியாக தங்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவுறுத்தியுள்ளது.

தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் வரை, குறித்த சிகையலங்கார நிலையம் இயங்கிவந்துள்ளது.

இதனால் கடந்த 10 நாட்களுக்குள் குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்கள் தாமாகவே முன்வந்து தங்களுக்குரிய பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்து, கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

hey