வவுனியா நகரின் சந்தை சுற்றுவட்ட வீதி இராணுவத்தினரால் தற்காலிகமாக முடக்கப்பட்டு பீ சி ஆர் பரிசோதனை முன்னெடுப்புவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இன்று காலை (23.07.2021) இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் அமைந்துள்ள சிகையலங்கார செய்யும் நிலையத்தில் பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை குறித்த வீதியுடனான போக்குவரத்து இராணுவத்தால் துண்டிக்கப்பட்டு முற்றாக முடக்கப்பட்டு முடக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு சுகாதார பரிசோதகர்களால் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்களை தாமாகவே முன்வந்து பிசீஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

hey