வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 28வயதுடைய யுவதி 4வருடங்களான கொ.டூர சி.த்திரவதை : வைத்தியசாலையில் அனுமதி



வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் கடந்த 4 வருடங்களான சி.த்திரவதைக்குபட்ட 28வயதுடைய யுவதியினை அப் பகுதி கிராம சேவையாளர் கஜேந்திரன் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.மெனிக்பாம் பகுதியில் வசித்து வந்த குறித்த யுவதிக்கு பா.லியல் ரீதியான து.ன்பு.றுத்தல் மற்றும் சி.த்தரவதைகள் இடம்பெறுவதாக குறித்த கிராம அலுவலகருக்கு கிடைக்கப்பட்ட மு.றைப்பாட்டினையடுத்து கிராம சேவையாளர் கஜேந்திரன் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த யுவதியினை மீட்டெடுத்து உ டல் ப.ரிசோதனைக்காக செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சி.கிச்சைக்காக யுவதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதிக்கு பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியினை தொடர்பு கொண்டு வினாவிய போது,நேற்றையதினம் கிராம சேவையாளருடன் எமது பொலிஸ் பிரிவினரும் இணைந்தே குறித்த யுவதியினை மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். தற்போது யுவதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம் யுவதியிடம் மேற்கொள்ளப்படும் ம ருத்துவ ப ரிசோதனைகளின் பின்னரே சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவையாளரை தொடர்பு கொண்டு வினாவிய போது,எனக்கு கிடைக்கப்பெற்ற மு.றைப்பாட்டின் அடிப்படையின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் யுவதியினை மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

எனினும் குறித்த பறயனாலங்குளம் பொலிஸார் மந்த கதியில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பெண்கள் பா.துகாப்பு திணைக்களங்கள் , அமைப்புக்கள் இணைந்து குறித்த யுவதிக்கு நி.யாயத்தினை பெற்று யுவதினை பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புமாறு அப்பகுதி மக்கள் வி.சனம் தெரிவித்துள்ளனர்.

hey