கிளிநொச்சி ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசியால் நடந்தது என்ன..? வெளிவந்த பரிசோதனை முடிவுகள்புதிய இணைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 46 பேர் இன்று கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி சம்பந்தமான ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்திருப்பதாக வைத்தியர் சரவணபவன் தெரிவித்தார்.அவர்கள் அனைவரும் பதற்றம் காரணமாகவே இந்நிலைமைக்கு ஆளானதாகவும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

அதேநேரம் குறித்த 46 பேரில் தற்போது 15 பேர் மாத்திரமே வைத்தியசாலையில் தங்கி இருப்பதாகவும், அவர்களும் சில மணி நேரங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு நேற்றைய தினம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.இந்த நிலையில் அவர்களில் 25இற்கும் அதிகமானோர் திடீர் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. இதனால் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகை தந்த குறித்த ஊழியர்கள் திடீரென உடல் நல பாதிப்பிற்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

hey