கட்டுநாயக்க விமான நிலையம் முழுமையாக திறக்கப்படும் திகதி அறிவிப்புதற்போது மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் முழுமையாக திறக்கப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறைகளின் கீழ் விமான நிலைய செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு அவசியமான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு வரும் அனைவருக்கும் விமான நிலையத்தில் பீ சீஆ ர் ப ரிசோ தனை மேற்கொண்டு அதன் முடிவுகளை அங்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விமான நிலைய பகுதியில் முழுமையான ப ரிசோ தனை கூடம் ஒன்றை நிர்மாணிக்கும் ந டவடிக்கைகயை வெகு விரைவில் நி றைவு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey