வவுனியா-செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக ராஜ்மோகன் அவர்கள் நியமனம்வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிகுளம் கோட்ட பதில் கல்விப் பணிப்பாளராக இ.ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.பரீட் என்பவர் ஓய்வு பெற்று சென்றுள்ள நிலையில், ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இ.ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மகாவித்தியாலயம், முழங்காவில் மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி என்பவற்றின் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் வவுனியா தெற்கு வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையிலேயே, தற்போது இவர் பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

hey