செட்டிகுளம் – முதலியார்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து…!!வவுனியா செட்டிக்குளம்

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலியார்குளம் பகுதியில் இரு மோட்டார் சைக்கில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலியார்குளம் சந்தியில் இன்று (23.03.2021) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிக்குளம் வீதியுடாக மோட்டார் சைக்கிலில் சென்ற இளைஞன் முதலியார் குளம் சந்தியில் வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey