தலைமன்னார் விபத்தில் உ.யிரிழந்த மாணவனுக்கு பலர் கண்ணீர் மல்க அஞ்சலிதலைமன்னார் பகுதியில்..

தலைமன்னார் பியர் பகுதியில் நேற்று மதியம் தனியார் பேருந்தொன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உ.யிரிழந்த, தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த பாலசந்திரன் தருண் (வயது 14) என்ற மாணவனின் சடல.ம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவனின் இல்லத்தில் இன்று காலை அ.ஞ்சலி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் உ.டலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் குறிப்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச ஊழியர்கள் என பலரும் க.ண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சிறுவனின் உ.டல் பொது மக்களின் அஞ்சலியின் பின்னர் இன்று மாலை தலைமன்னார் பொது ம.யானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை வி.பத்திற்கு உள்ளான தனியார் பேருந்தின் சாரதி மற்றும் குறித்த புகையிரத கடவையின் பா.துகாப்பு ஊழியர் ஆகியோர் நேற்று மாலை தலைமன்னார் பொ.லிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை வி.ளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey