வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைக்கு பயன்படுத்த அமைச்சரவை அனுமதிஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கையை ஏற்று வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை கட்டுவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியா மதகு வைத்தகுளத்தில் 291 மில்லியன் நிதியை ஒதுக்கி அன்றைய அமைச்சரவை அனுமதி அளித்து கட்டப்பட்டது..

ஆனாலும் அதன் அமைவிடம் தொடர்பில் அன்றைய வவுனியா மாவட்ட அரசியல் தரப்பினரிடையே காணப்பட்ட இ ழுபறி நிலை காரணமாக குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டபோதும் மக்களது வர்த்தக நடவடிக்கைகளுக்கு விடாது பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கான அனுமதியை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு குறித்த மாவட்ட வர்த்தகர்களும் பொதுநலவிரும்பிகளும் கொண்டு சென்றிருந்த நிலையில் இன்றையதினம் அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயத்தை கோரிக்கையாக முன்வைத்திருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக திறப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட வடமேல் மாகாணத்தில் “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த மாகாணத்தில் பல ஆண்டுகளாக இறால் செய்கை பலதரப்பட்டவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும் அவை விஞ்ஞானபூர்வமான பொறிமுறைகளை கொண்டு மேற்கொள்ளப்படாமையால் பெரும் நட்டங்களை செய்கையாளர்கள் சந்திக்க நேரிட்டது.

ஆனாலும் குறித்த மாகாணத்தில் நவீன வசதிகளுடன் விஞ்ஞான பொறிமுறைகளை உள்ளடக்கிய வகையில் பொதுவான இறால் செய்கையை மேற்கொள்ளக் கூடிய இடங்களில் முன்னெடுத்தால் அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலை உள்ளதால் அதற்கான பொ றிமுறைகளை உள்ளடக்கிய “வனமி” இரால் செய்கையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கையாக சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த “வனமி” இ றால் செய்கையை ஊ க்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-அமைச்சின் ஊடகப்பிரிவு-

hey