வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட் – 19 தொற்று உறுதிவவுனியாவில்

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்றையதினம் வெளிவந்திருந்தது.

அதனடிப்படையில் அங்கு பணியாற்றும் வவுனியா சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.

hey