ம றைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் அ ஞ்சலிமறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் , அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியா குருமன்காட்டுபகுதியில் அமைந்துள்ள விருந்தினர் வி டுதியில் இன்று (29.05.2020) மதியம் 12.00 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் திடீர்ம றைவு மலையக மக்களுக்கு பே ரிழப்பாகும். அவரின் பிறந்ததினமான இன்று தமிழர் சமூக ஜனநாயக கட்சியும் சிறி ரெலோ கட்சியும் இணைந்து இவ் அ ஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது அ ன்னாரது உருவப்படத்திற்கு நினைவு சு டர் ஏற்றி ம லரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

hey