வவுனியா மாணவர்களுக்கு Zoom இன் ஊடாக இலவச கற்றல் நடவடிக்கைகோ வி ட் -19 வை ர ஸ் தொ ற்று காரணமாக கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளமையினையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சூம் (ZOOM) இன் ஊடாக இலவச கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் வவுனியா தெற்கு , வடக்கு வலயக்கல்வி பணிமணையினர் , வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் சூம் (ZOOM) ஊடான கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது புலமைப்பரிசில் தரம் 5 மாணவர்கள் , கா.போ.த சாதாரண தர மாணவர்கள் , கா.போ.த உயர்தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒரே தடவையில் 500 மாணவர்களை இணைக்கும் வசதி குறித்த சூம் இணையத்தளத்தில் உள்ளமையினால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இலகுவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

hey