நள்ளிரவு முதல் அ திகரிக்கம் அரிசி விலைகள் 96 தொடக்கம் 125 ரூபாய் வரை உயர்வுஅரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் அரிசியின் அதிகபட்ச சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாடு 96 ருபாய், சம்பா 98 ரூபாய் , கீரி சம்பா ஒரு கிலோவுக்கு 125 ரூபாய் ஆகவும் விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக அரிசி வகைகள் மாறுபட்ட விலைகளில் விற்கப்பட்டதால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்நிலையில் அரிசி வகைகள் அதிக விலையில் விற்கப்பட்ட பல பிரதேசங்களில் சோதனைகள் இடம்பெற்றதுடன், பல வர்த்தகர்களுக்கு எ ச்சரி க்கையும் ம் விடுக்கப்பட்டிருந்தது.

கொ ரோனா தொ ற்று காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊ ரடங்குச் ச ட்ட த்தினால், வவுனியா உட்பட நாட்டின் பல இடங்களில் பல வர்த்தகர்கள் அத்தியவசியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை அ திகரித்து வி ற்பனை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

hey