வவுனியாவில் கடும் மழையின் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட பாலம் : போக்குவரத்து துண்டிப்புதொடர்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக வவுனியா சின்னத்தம்பனை கிராமத்திலிருந்து மடுதேவாலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் பாலம் முற்றாக சேதமடைந்துள்ளது.

பாலம் பாதிப்படைந்துள்ள நிலையில், இவ்வீதியை பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்தவீதி இரணை இலுப்பைக்குளம், செங்கல்படை, வேலங்குளம், மடுக்குளம் சின்னத்தம்பனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மடு பிரதேச செயலகத்திற்கு செல்லும் பிரதான வீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது பாலம் சேதமடைந்தமையால் மன்னார் பிரதான வீதிக்கு செல்வதானால் பத்து கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மக்களின் நன்மை கருதி குறித்த பாலத்தை உடனடியாக திருத்தி தருமாறு உரிய அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

hey