பல்கலைக்கழக அனுமதி : விண்ணப்பம் உ றுதிப்படுத்தும் கால எ ல்லை நீ டிப்பு!பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை உ றுதிப்படுத்துவதற்கான கால எல் லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொ ரோ னா தா க்க ம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நன்மை கருதி, விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கு மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 20 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த தினங்களில் தமது வி ண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள் ளாத மாணவர்கள், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை தமது விண்ணப்பங்களை உ றுதிப்படுத்திக் கொள்ள கால அ வகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போ தைய நி லைமை கா ரணமாக சு காதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒவ்வொரு பாடசாலையிலும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்களின் விண் ணப்பங்களை அதிபர் அல்லது பிரதி அதிபர் சா ன்றுப்படுத்தவேண்டும் எனவும் கல்வி அ மைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey