இலங்கையில் முதன்முறையாக 7500 மாடுகளுக்கு வைரஸ் தொற்றுஇலங்கையில் முதன் முதலாக கண்டறியப்பட்ட வைரஸ் நோய் தற்போது 7500இற்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தொற்றியுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையில் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
தற்போது இந்த வைரஸ் இலங்கையில் 14 மாவடடங்களில் பரவியுள்ளதாக தொற்று நோய் தொடர்பான மருத்துவர் பிரதீப் குமாரவடு கூறியுள்ளார்.

இது குறித்து ஆராய கால்நடை வள அபிவிருத்தி ராஜாங்க அமைச்சு 7 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் வழங்குமாறு, கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தலைமையிலான இந்த குழுவிற்கு ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் அறிவித்துள்ளார்.

hey