இலங்கையில் இன்னும் 15 வருடங்களில் குடிநீர் கிடைக்காது…? வெளியாகிய தகவல்மலசலகூடங்களின் கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கப்படுவதாகவும், துரித நடவடிக்கை எடுக்காவிடில் 15 வருடங்களில் குடிநீர் கிடைக்காது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மலசல கூடங்களின் 90 வீதமான கழிவுகள் நிலத்தடி நீரில் கலப்பதையடுத்து பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க நேர்ந்துள்ளதாகவும் அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கழிவுகள் நேரடியாக நீருடன் கலப்பதால் நிலத்தடி நீரின் தரமும் தன்மையும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் அதற்கான தீர்வை விரைவில் பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கான தீர்வை விரைவில் பெற்றுக்கொடுக்காவிட்டால் பெரும் குடிநீர் பிரச்சினைக்கு உள்ளாகிவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய மலசலகூட கழிவுகள் முகாமைத்துவம் தொடர்பான கொள்கை தயாரிப்பது சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

hey