வடக்கில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று….!!வடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அண்மையில் கொழும்பில் பிசிஆர் சோதனை செய்த பின்னர், பூநகரிக்கு தப்பி வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 இளைஞர்களில் 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மருதங்கேணி பிரதேசத்தில் கொழும்பிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மருதனார்மட கொத்தணியுடன் தொடர்புடைய, சங்கானையை சேர்ந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 441 பிசிஆர் மாதிரிகள் ஆய்வுக்குட்பட்டதில் உடுவில் பகுதியை சேர்ந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

hey