முகக் கவசம் அணியாத 14 பேருக்கு கொரோனா தொற்று ; முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாதவர்கள் தொடர்ந்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதற்கமைய இதுவரையில் 550 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 14 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், PCR பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

hey