சற்றுமுன் வெளிவந்த தகவல் வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதுடன் அதேபகுதியை சேர்ந்த கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் பட்டாணிச்சூர் கிராமம் கடந்த இருதினங்களாக முடக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பரிசோதனையின் அடிப்படையில் இன்று மாலை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் 5 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

hey