வவுனியாவில் இரவோடு இரவாக மூன்று ஆலயங்களில் திருட்டுவவுனியாவில்

வவுனியாவில் ஒரே இரவில் மூன்று ஆலயங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொன்னாவரசன்குளம் ஆதி விநாயகர் ஆலயம், கந்தபுரம் அம்மன் ஆலயம், கந்தபுரம் பிள்ளையார் ஆலயம் என்பவற்றிலேயே நேற்று இரவு (04.01) குறித்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள் ஆலய கதவுகளை உடைத்து ஆலயத்தில் இருந்த பணத்தையும், ஒலிபெருக்கி பாகங்களையும் கொண்டு சென்றுள்ளதுடன், மூன்று ஆலயங்களினதும் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டுள்ளன.

காலை ஆலயத்திற்கு சென்ற நிர்வாகத்தினர் ஆலயம் உடைக்கப்பட்டு திருட்டுப் போயுள்ளதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey