வவுனியாவில் குடலை பருவத்தில் உள்ள வயல் நிலங்களை நாசம் செய்த யானைகள் : கண்ணீரில் விவசாயிவவுனியா, ஆசிகுளம்

வவுனியா, ஆசிகுளம் பகுதியில் உள்ள குடலைப் பருவ நெல் வயல்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஆசிகுளம் கமக்கார அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களுக்குள் இரவு வேளை கூட்டமாக புகுந்த 20 வரையிலான காட்டு யானைகள் குடலைப் பருவத்தில் இருந்த நெல்களை உண்டும், அதனை அழித்தும் நாசம் செய்து விட்டு அதிகாலை அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளன.

இதன்காரணமாக ஆசிகுளம், இலுப்பைக்குளத்தின் கீழ் உள்ள 5 ஏக்கர் நெல் வயல்கள் அழிவடைந்துள்ளது. வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்த நிலையில் காட்டு யானைகள் நெல் வயல்களை அழித்தமையால் கடன்களை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால், தமக்கு பாதுகாப்பான யானை வேலி அமைத்து தருவதுடன், தமது விவசாய அழிவுக்கான இழப்பீடுகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரியுள்ளனர்.

hey