வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் 2021 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர்வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள்

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2021 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 8.50 மணிக்கு மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேனவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு புதுவருட சத்தியபிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் செய்து கொண்டனர்.

தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

hey