இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள 20 ரூபா நாணயக்குற்றிஇலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள 20 ரூபா நாணயக்குற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்‌ஷ்மன் நாணயக்குற்றியை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 20 ரூபா நாணயக்குற்றி வௌியிடப்பட்டுள்ளது.

அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் 20 ரூபா நாணயக்குற்றி தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய 20 ரூபா நாணயக் குற்றிகள் மூவாயிரம் இன்று வௌியிடப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

hey