நாட்டில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள்நாட்டில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மருத்துவர்களாக கடமையாற்றி வருவோரில் பெரும்பான்மையினர் சுதேச மருத்துவ அமைச்சிலோ அல்லது இலங்கை மருத்துவ பேரவையிலோ தங்களை பதிவு செய்து கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ சேவை பெற்றுக் கொள்ளும் நபர்கள் மருத்துவரின் பின்புலம் பற்றி தெரிந்து கொள்வது ஆபத்துக்களை தவிர்க்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey