வவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவுவவுனியா வைத்தியசாலையில்

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுடன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் முடிவு நேற்று (25.12.2020) மாலை வெளியாகிய நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரின் உடல் நிலமை கவலைக்கிடமாக காணப்பட்டதினையடுத்து பாதுகாப்புடன் இன்று (26.12.2020) மதியம் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் அனுராதபுரம் அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

இந்நிலையில் இன்று (26.12.2020) இரவு 7.00 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

hey