வவுனியாவில் மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை கணவன் பொலிஸில் முறைப்பாடு : அதிகம் பகிர்ந்து கண்டுபிடிக்க உதவுங்கள்உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கணவன்,

வவுனியா, வெளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ராஜா வினிதா என்ற தனது மனைவி கடந்த 13 ஆம் திகதி மாலை அவரது தாயாரின் வீட்டிலிருந்து உறவுக்காரர்களிடம் சென்றுவருவதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். குறித்த நேரத்தில் நான் உறங்கிக்கொண்டிருந்தமையால் அவர்கள் சென்றதை அறிந்திருக்கவில்லை.

எனினும் நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராதமையினால் அவர் சென்றதாக தெரிவிக்கப்படும் உறவினர் வீடுகளில் சென்று பார்த்த போது அவர் அங்கு வரவில்லை என தெரிவித்தனர். அவரது தொலைபேசியும் இயங்கவில்லை.

இந்நிலையில் வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள கணவனின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம்- 0769080042

hey