பண்டிகை காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை கூடியளவில் குறைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கைபண்டிகை காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை கூடியளவில் குறைத்துக்கொள்ளுமாறு அந்த மாவட்டத்தின் கொரோனா தடுப்பு குழு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதே இதற்குக் காரணம் எனவும் அந்த குழு கூறியுள்ளது.

கடந்த மூன்று தினங்களில் திருகோணமலையில் சுமார் 70 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் எனத் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாடிகோரள தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் திருகோணமலையில் பாடசாலை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அண்மையில் மூடப்பட்டன.

hey