வவுனியாவில் மொத்த விற்பனை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை



சந்தை வியாபாரிகளுக்கு

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மொத்த விற்பனை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பல தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டு வரும் நிலையில் தற்போது வவுனியாவிலும் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கும் அதிகமான மொத்த மரக்கறி வியாபாரிகளுக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

hey